/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பாசன கால்வாயில் அடைப்பு: சீரமைத்த மக்கள் பாசன கால்வாயில் அடைப்பு: சீரமைத்த மக்கள்
பாசன கால்வாயில் அடைப்பு: சீரமைத்த மக்கள்
பாசன கால்வாயில் அடைப்பு: சீரமைத்த மக்கள்
பாசன கால்வாயில் அடைப்பு: சீரமைத்த மக்கள்
ADDED : ஜூலை 03, 2024 02:19 AM

கூடலுார்;கூடலுார் கம்மாத்தி பகுதியில், நீர்ப்பாசன கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை, பொக்லைன் உதவியுடன் மக்கள் சீரமைத்தனர்.
கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சி கம்மாத்தி பகுதியில், கம்மாத்தி ஆற்றின் குறுக்கே சிறிய தடுப்பணை அமைத்து அதிலிருந்து கம்மாத்தி, சேமுண்டி, கீச்சலுார், புத்துார்வயல் விவசாயிகள் பாசன வசதி பெரும் வகையில், பாசன கால்வாய் அமைத்துள்ளனர்.
தொடர் பராமரிப்பு இன்றி பாசன கால்வாயில் சேரும் சகதியும் தேங்கி, செடிகள் வளர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், பெய்த பலத்த மழையில், பாசன கால்வாயில் ஏற்பட்ட வெள்ளம், வழிந்தோட வசதியின்றி விவசாயத் தோட்டங்களிலும் சூழ்ந்தது.
ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம், பாசன கால்வாய் சீரமைக்க மக்கள் வலியுறுத்தினர்.
'சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சீரமைப்பு பணிகள் துவங்கவில்லை. அதிருப்தி அடைந்த மக்கள், தங்கள் சொந்த பணத்தில் பொக்லைன் உதவியுடன் பாசன கால்வாயை சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
மக்கள் கூறுகையில்,'மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இது போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.