/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'பிளாஸ்டிக்' கழிவுகளை வீச வேண்டாம்; வன விலங்குகள் உட்கொள்வதால் சிக்கல் 'பிளாஸ்டிக்' கழிவுகளை வீச வேண்டாம்; வன விலங்குகள் உட்கொள்வதால் சிக்கல்
'பிளாஸ்டிக்' கழிவுகளை வீச வேண்டாம்; வன விலங்குகள் உட்கொள்வதால் சிக்கல்
'பிளாஸ்டிக்' கழிவுகளை வீச வேண்டாம்; வன விலங்குகள் உட்கொள்வதால் சிக்கல்
'பிளாஸ்டிக்' கழிவுகளை வீச வேண்டாம்; வன விலங்குகள் உட்கொள்வதால் சிக்கல்
ADDED : செப் 21, 2025 10:39 PM
கூடலுார்; முதுமலை சாலையோரங்களில் வீசப்படும், பிளாஸ்டிக் கழிவுகளை, உண்பதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது,' என, அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் பிளாஸ்டிக், குடிநீர், குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்தவும், எடுத்து வரவும் தடை விதித்துள்ளனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா வாகனங்களை சோதனை செய்து, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும், இதனை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தெப்பக்காடு - மசினகுடி சாலை ஓரங்களில் சுற்றுலா பயணிகள் வீசி செல்லும், பிளாஸ்டிக் கழிவுகளை, சாலை ஓரங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டும், வனவிலங்குகள் உண்பதால், உடல் நலம் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'பிளாஸ்டிக் கழிவுகளை வனவிலங்குகள் உண்பதால், அதற்கு உணவு செரிமானத்திற்கு பிரச்னை ஏற்பட்டு, உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. எனவே, கண்காணிப்பு பணியை மேலும், தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலை எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், வாகனங்களை ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறோம்.
சாலையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை வன ஊழியர்கள் தினமும் சேகரித்து அகற்றி வருகின்றனர்.
எச்சரிக்கையை மீறி, சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.