/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இரவோடு இரவாக 'சிமென்ட்' சாலை; மழையால் அடித்து செல்லப்பட்ட கற்கள் இரவோடு இரவாக 'சிமென்ட்' சாலை; மழையால் அடித்து செல்லப்பட்ட கற்கள்
இரவோடு இரவாக 'சிமென்ட்' சாலை; மழையால் அடித்து செல்லப்பட்ட கற்கள்
இரவோடு இரவாக 'சிமென்ட்' சாலை; மழையால் அடித்து செல்லப்பட்ட கற்கள்
இரவோடு இரவாக 'சிமென்ட்' சாலை; மழையால் அடித்து செல்லப்பட்ட கற்கள்
ADDED : செப் 21, 2025 10:38 PM

குன்னுார்; குன்னுார் டி.டி.கே., சாலையில் திடீரென இரவில், இன்டர்லாக் கற்களை அகற்றி, சிமென்ட் சாலை அமைத்த நிலையில், ஒரே மழையில் கற்கள் அடித்து செல்லப்பட்டன.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட டி.டி.கே., சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென ஆவின் கட்டடம் அருகே, நகராட்சி சார்பில், இன்டர்லாக் கற்களை அகற்றி, சிமென்ட் சாலை போடப்பட்டது. நேற்று பெய்த ஒரே மழையில் இந்த சிமென்ட் கற்கள் அடித்து செல்லப்பட்டன.
தற்போது, தினமும் மழை பெய்து வரும் நிலையில், வானிலை மையம் நீலகிரிக்கு கன மழை முன்னறிவிப்பு கொடுத்துள்ளது. அதனை கண்டு கொள்ளாமல் இரவில் சிமென்ட் சாலை அமைத்து, ஒரே மழைக்கு அடித்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.