/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அலுவலகத்தை சீரமைத்து திறந்தால் பெரும் பயன் அலுவலகத்தை சீரமைத்து திறந்தால் பெரும் பயன்
அலுவலகத்தை சீரமைத்து திறந்தால் பெரும் பயன்
அலுவலகத்தை சீரமைத்து திறந்தால் பெரும் பயன்
அலுவலகத்தை சீரமைத்து திறந்தால் பெரும் பயன்
ADDED : செப் 21, 2025 10:39 PM

கூடலுார்; 'கூடலுார் புளியாம்பாறையில் பராமரிப்பு இன்றி பூட்டி கிடைக்கும் வி.ஏ.ஓ., அலுவலகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கூடலூர், புளியாம்பாறை கிராமத்தின் ஒரு பகுதி தேவர்சோலை பாடந்துறை வருவாய் கிராமத்துக்குள் வருகிறது. வருவாய் அலுவலகம் தொடர்பான பணிகளுக்கு கிராம மக்கள் பாடந்துறை அல்லது கூடலுார் சென்று வி.ஏ.ஓ., சந்தித்து வந்தனர்.
புளியாம்பாறையில் இருந்து, கூடலுார் தேவர்சோலைக்கு நேரடி பஸ் வசதி இல்லாததால், முதியவர்கள், பெண்கள், பழங்குடியினர், வி.ஏ.ஓ., அலுவலகம் சென்று வர சிரமப்பட்டு வந்தனர்.
இதனால், சிரமத்தை தவிர்க்க புளியம்பாறையில், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டது. துவக்கத்தில் முறையாக செயல்பட்ட அலுவலகம், தற்போது பராமரிப்பின்றி பூட்டி கிடைக்கிறது. இதனால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த அலுவலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி உள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'மக்களின் சிரமத்தை தவிர்க்க, புளியாம்பாறையில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தை, சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.