/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பீட்ரூட் விலை உயர்வு: அறுவடை பணி தீவிரம் பீட்ரூட் விலை உயர்வு: அறுவடை பணி தீவிரம்
பீட்ரூட் விலை உயர்வு: அறுவடை பணி தீவிரம்
பீட்ரூட் விலை உயர்வு: அறுவடை பணி தீவிரம்
பீட்ரூட் விலை உயர்வு: அறுவடை பணி தீவிரம்
ADDED : செப் 22, 2025 10:04 PM

கோத்தகிரி:
கோத்தகிரி பகுதியில் பீட்ரூட் விலை அதிகரித்துள்ளதால், அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், நீர் ஆதாரமுள்ள விளை நிலங்களில் மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு போகத்தில், பீட்ரூட் அதிக பரப்பளவில் பயிரிட்டு, விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது, பீட்ரூட் படிப்படியாக அறுவடைக்கு தயாராகி வருகிறது. ஒரு கிலோ பீட்ரூட் தற்போது, மேட்டுப்பாளையம் மண்டிகளில், 35 முதல், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், 80 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு, 2,500 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால், கடந்த ஒரு வாரமாக, தயாரான பீட்ரூட் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இனிவரும் நாட்களில், மழை தொடரும் பட்சத்தில், தயாரான பீட்ரூட் தோட்டத்திலேயே அழுகி விடும் என்பதால், அறுவடை தீவிரம் படுத்தப்பட்டுள்ளது.
விவசாயி துரைராஜ் கூறுகையில், ''மகுசூல் ஓரளவு அதிகரித்துள்ள நிலையில், ஓரளவு விலையும் கிடைத்து வருவதால், மழை தீவிரம் ஆவதற்கு முன்பு, கூடுதல் தொழிலாளர்களை பணியமர்த்தி அறுவடை செய்து வருகிறோம்,'' என்றார்.