/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க வலிறுத்தல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க வலிறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க வலிறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க வலிறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க வலிறுத்தல்
ADDED : செப் 09, 2025 09:49 PM

பந்தலுார்; 'மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு அரசின் திட்டங்களை முறையாக கொண்டு செல்ல வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே சேரங்கோடு சமுதாய கூடத்தில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில், தலைவர் தங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நிர்வாகி சாரதா வரவேற்றார்.
அதில், 'மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மாற்றுத் திறனாளிகள் அடிக்கடி ஊட்டி அலுவலகம் சென்று தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதனால் பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் குறைதீர் முகாம்களை நடத்த வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'அரசு மூலம் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி தரவும், பயனாளிகளிடம் மனுக்கள் பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, திட்டங்களை பெற்று தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
கூட்டத்தில், பொறுப்பாளர்கள் ஜெலீல், புஷ்பா, பிஜூ, பொன்னுசாமி, விக்கி, பூவரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.