/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பஸ்சில் சேதமடைந்த மாற்று டயர்; அவசர நேரத்தில் பயனில்லை பஸ்சில் சேதமடைந்த மாற்று டயர்; அவசர நேரத்தில் பயனில்லை
பஸ்சில் சேதமடைந்த மாற்று டயர்; அவசர நேரத்தில் பயனில்லை
பஸ்சில் சேதமடைந்த மாற்று டயர்; அவசர நேரத்தில் பயனில்லை
பஸ்சில் சேதமடைந்த மாற்று டயர்; அவசர நேரத்தில் பயனில்லை
ADDED : செப் 09, 2025 09:49 PM

பந்தலுார்; பந்தலுார் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் சேதமடைந்த மாற்று டயர்களை வைத்துள்ளதால், பயன் இல்லாத நிலை உள்ளது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதி கிராம பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழகத்தின், கூடலுார் கிளையிலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதில், பெரும்பாலான பஸ்கள் பழுதடைந்த நிலையில் இயக்குவதால் கூடுதலாக பயணிக்கும் மாணவர்கள் மற்றும் பயணிகளை முழுமையாக ஏற்றி செல்ல முடியாத நிலையில் இயக்கப்பட்டு வருகிறது.
அதில், ஒரு சில பஸ்களில் மாற்று டயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த டயர்கள் சேதமடைந்த டயர்களாக உள்ள நிலையில், பெயரளவிற்கு மாற்று டயர்களை வைக்கப்பட்டுள்ளது. இந்த டயர்களை பொருத்தி பஸ்களை இயக்கினால், எந்த இடத்தில் பழுதடைந்து நிற்கும் என்று தெரியாத சூழல் உள்ளது.
எனவே, தொலைதுார மற்றும் இரவு நேர பஸ்களில், தரமான மாற்று டயர் மற்றும் உபகரணங்களை வைக்க வேண்டும்.