/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தேயிலை பூங்காவை சீசனுக்காக தயார்படுத்தும் பணிகள் தீவிரம் தேயிலை பூங்காவை சீசனுக்காக தயார்படுத்தும் பணிகள் தீவிரம்
தேயிலை பூங்காவை சீசனுக்காக தயார்படுத்தும் பணிகள் தீவிரம்
தேயிலை பூங்காவை சீசனுக்காக தயார்படுத்தும் பணிகள் தீவிரம்
தேயிலை பூங்காவை சீசனுக்காக தயார்படுத்தும் பணிகள் தீவிரம்
ADDED : மார் 11, 2025 10:49 PM

ஊட்டி; ஊட்டி தேயிலை பூங்காவை, கோடை சீசனுக்கு தயார்படுத்தும் வகையில், பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மற்றும் படகு இல்லம் மையங்களுக்கு செல்வதுடன், தொட்டபெட்டா அருகே உள்ள தேயிலை பூங்காவின் அழகை கண்டு களிக்க தவறுவதில்லை.
மொத்தம், 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேயிலை பூங்காவில், 5 ஏக்கர் தேயிலை எஸ்டேட்டும், மீதம் உள்ள, 5 ஏக்கர் பரப்பளவில், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
தேயிலை தொழிற்சாலை மாதிரி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அதனை கண்டுக்களிக்கின்றனர். மேலும், இப்பூங்காவில் தேயிலை துாள் உட்பட வாசனை திரவிய பொருட்கள் விற்பனை செய்வதால், பார்வையாளர்கள் கூடுமானவரை வாங்கி செல்கின்றனர்.
ஊட்டியில், மே மாதம் கோடை விழா நடைபெறுவதால், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும், பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய ஏதுவாக, பூங்கா நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, சீசன் நாட்களில் பூத்து குலுங்கும் வகையில் தயார் செய்வதற்காக, மலர் நாற்றுகள் மற்றும் புல் தரைக்கு தண்ணீர் பாய்ச்சி, பராமரிப்பு பணியில் தீவிரமாக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.