/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டி நகரில் மந்த கதியில் நவீன கழிப்பிடம் கட்டும் பணி ஊட்டி நகரில் மந்த கதியில் நவீன கழிப்பிடம் கட்டும் பணி
ஊட்டி நகரில் மந்த கதியில் நவீன கழிப்பிடம் கட்டும் பணி
ஊட்டி நகரில் மந்த கதியில் நவீன கழிப்பிடம் கட்டும் பணி
ஊட்டி நகரில் மந்த கதியில் நவீன கழிப்பிடம் கட்டும் பணி
ADDED : மார் 11, 2025 10:50 PM

ஊட்டி; ஊட்டி நகரில், 10 இடங்களில் கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பிட பணிகளுக்கான நிதி வேறு வளர்ச்சி பணிக்கு திருப்பி ஒதுக்கியதால் பணிகள் 'ஆமை' வேகத்தில் நடக்கிறது.
மத்திய அரசின், 'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது, துாய்மையான இந்தியாவை உறுதி செய்வதும், குடிமக்கள் மத்தியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி , சர்வதேச சுற்றுலா நகரமாக உள்ள ஊட்டியில், சுற்றுலா பயணியரின் வருகையை கருத்தில் கொண்டு, ஏ.டி.சி., பஸ் ஸ்டாண்ட், கேசினோ சந்திப்பு, பிங்கர் போஸ்ட், பஸ் ஸ்டாண்ட், தாவரவியல் பூங்கா சாலை என, 10 இடங்களில் நவீன கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக, ஒரு கழிப்பிடத்திற்கு தலா, 20 லட்சம்ரூபாய் வீதம், 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் துவக்கப்பட்டது. ஆனால், ஒதுக்கப்பட்ட நிதி வேறு வளர்ச்சி பணிக்கு திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இப்பணிகள் 'ஆமை' வேகத்தில் நடக்கிறது.
மக்கள் கூறுகையில், 'அடுத்த மாதம் ஊட்டியில் சீசன் துவங்க இருப்பதால், நவீன கழிப்பிடம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இல்லையெனில், கடந்த ஆண்டை போல, சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்பட நேரிடும்,' என்றனர்.