/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீரோடை தண்ணீரை தடுத்து நிறுத்தி பாசனம்; எஸ்டேட் பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு நீரோடை தண்ணீரை தடுத்து நிறுத்தி பாசனம்; எஸ்டேட் பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு
நீரோடை தண்ணீரை தடுத்து நிறுத்தி பாசனம்; எஸ்டேட் பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு
நீரோடை தண்ணீரை தடுத்து நிறுத்தி பாசனம்; எஸ்டேட் பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு
நீரோடை தண்ணீரை தடுத்து நிறுத்தி பாசனம்; எஸ்டேட் பகுதியில் வருவாய் துறையினர் ஆய்வு
ADDED : மார் 11, 2025 10:49 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே குந்தலாடி பகுதியில், நீரோடை தண்ணீரை தடுத்து தோட்டத்திற்கு பாசனம் செய்த எஸ்டேட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் குந்தலாடி அருகே, பாக்கனா மற்றும் புத்துார் வயல் கிராமங்கள் உள்ளன.
இதனை ஒட்டி தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டம் செயல்பட்டு வருகிறது. தோட்டத்திற்கு பாசன வசதி ஏற்படுத்தி கொள்ள, இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இதனை பயன்படுத்தி எஸ்டேட் நிர்வாகம் பொதுமக்கள் பயன்படுத்தும் நீரோடை தண்ணீரை தடுத்து நிறுத்தி, எஸ்டேட் கிணற்றிற்கு திருப்பி விட்டு அங்கிருந்து பெரிய குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்து தோட்டத்திற்கு ஸ்பிரிங்களர் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, பந்தலுார் தாசில்தார் சிராஜூநிஷா, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ., சண்முகம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நீரோடையில் அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் அகற்றப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார பயன்பாடு குறித்தும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர் அதிகாரிகளின் உத்தரவின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.