/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரி மாவட்டத்தில் மழை; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள் நீலகிரி மாவட்டத்தில் மழை; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
நீலகிரி மாவட்டத்தில் மழை; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
நீலகிரி மாவட்டத்தில் மழை; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
நீலகிரி மாவட்டத்தில் மழை; மகிழ்ச்சியில் சிறு விவசாயிகள்
ADDED : மார் 11, 2025 10:48 PM

கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்தது. இதனால், விவசாய நிலங்கள் உட்பட, நீர் ஆதாரங்களில் தண்ணீர் வரத்து குறைந்தது.
மழையை நம்பி, மகசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், பலநுாறு ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறி சாகுபடி செய்த விவசாயிகள் காத்திருந்தனர். வானமும் காலை முதல் மேகமூட்டமாக காட்சியளித்தது.
இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணி முதல், 6:00 மணிவரை, கோத்தகிரி நகரம் உட்பட, சுற்றுவட்டார பகுதிகளில், கன மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த மழை, விவசாய பயிர்களுக்கு போதுமானதாக இல்லை என்றாலும், விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்தனர்.
இதேபோல, ஊட்டி, குன்னுார் பகுதிகளிலும் 6:00 மணிக்குமேல் தொடர் மழை பெய்தது.