/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆலத்துாரில் காங்., தோல்விக்கு காரணம் என்ன? கட்சி கூட்டத்தில் தெரிவிப்பதாக வேட்பாளர் ஆவேசம் ஆலத்துாரில் காங்., தோல்விக்கு காரணம் என்ன? கட்சி கூட்டத்தில் தெரிவிப்பதாக வேட்பாளர் ஆவேசம்
ஆலத்துாரில் காங்., தோல்விக்கு காரணம் என்ன? கட்சி கூட்டத்தில் தெரிவிப்பதாக வேட்பாளர் ஆவேசம்
ஆலத்துாரில் காங்., தோல்விக்கு காரணம் என்ன? கட்சி கூட்டத்தில் தெரிவிப்பதாக வேட்பாளர் ஆவேசம்
ஆலத்துாரில் காங்., தோல்விக்கு காரணம் என்ன? கட்சி கூட்டத்தில் தெரிவிப்பதாக வேட்பாளர் ஆவேசம்
ADDED : ஜூன் 07, 2024 12:18 AM
பாலக்காடு:கேரள மாநிலத்தில், லோக்சபா தேர்தலில் ஆலத்துார் தொகுதியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து காங்., கட்சியில் சர்ச்சை கிளம்பி உள்ளது.
கேரள மாநிலத்தில், 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், தரூர், சித்துார், நெம்மாரா, ஆலத்துார், சேலைக்கரை, குன்னம்குளம், வடக்காஞ்சேரி ஆகிய 7 சட்டசபை தொகுதிகளை உள்ளடங்கிய, ஆலத்தூர் தொகுதியில் காங்., வேட்பாளராக 'சிட்டிங்' எம்.பி., ரம்யா போட்டியிட்டார்.
மா.கம்யூ., கட்சி வேட்பாளராக மாநில தேவஸ்தான துறை அமைச்சரான ராதாகிருஷ்ணனும் பா.ஜ., வேட்பாளராக சரசுவும் போட்டியிட்டனர்.
இந்நிலையில், மா.கம்யூ., கட்சி வேட்பாளர் 4,03,447 ஓட்டுகள் பெற்று, 20,111 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்., வேட்பாளர் 3,83,336 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். பா.ஜ., வேட்பாளர் 1,82,230 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். காங்., தோல்வியை தொடர்ந்து, கட்சிக்குள் சர்ச்சை கிளம்பி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தங்கப்பன் கூறுகையில், ''ரம்யா சிறந்த வேட்பாளர் என்பதில் சந்தேகம் இல்லை. தோல்விக்கு காரணம் கட்சியில் நிலவிய சில பிரச்னைகள் எனக் கூற முடியாது. இருந்தாலும், தேர்தலில் கட்சியின் அறிவுரைகளை பின்பற்றுவதில் சில குளறுபடிகள் நடந்தது. இதுபற்றி, தேர்தலுக்கு முன்பே அனைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்,'' என்றார்.
வேட்பாளர் ரம்யா கூறியதாவது:
கட்சி அளிக்கும் அறிவுரைகளை பின்பற்றவில்லை என்ற விமர்சனம் சரியல்ல. 'பூத்' அளவில் மதிப்பீடு செய்தால் தான் தோல்விக்கான காரணத்தை சொல்ல முடியும்.
எம்.பி., என்ற நிலையில் ஆலத்துாரில் முழு நேரமும் ஆத்மார்த்தமாக செயல்பட்டேன் என்று நம்புகிறேன். மக்கள் நல்ல ஆதரவு தந்துள்ளனர். அதற்கு உதாரணம் தான் மா.கம்யூ., கட்சியின் செல்வாக்குள்ள தொகுதியில், 20,000 ஓட்டுகள் மட்டும் வித்தியாசத்தில் கடும் போட்டியை கொடுக்க முடிந்தது.
வெற்றி பெற்ற வேட்பாளரின் ஊராட்சி மற்றும் ஓட்டுச்சாவடியில் கூட அதிக ஓட்டு பெற முடிந்தது. தேர்தல் கமிட்டியின் தலைவர் கட்சியின் மாவட்ட தலைவர் என்பதால், பிரசாரத்தின் போது தொய்வு ஏற்பட்டுள்ளதா என்பது அவருக்கு தான் தெரியும். உணவையும், துாக்கத்தையும் தவிர்த்து முழு நேரமும் செயல்பட்ட தொண்டர்கள் மீது குறை சொல்ல மாட்டேன். கட்சியின் மாநில கூட்டத்தில், தெரிவிக்க வேண்டிய விஷயங்களை தெரிவிப்பேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.