/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வீடுகளுக்குள் கழிவு நீர் ;மக்கள் சாலை மறியல் வீடுகளுக்குள் கழிவு நீர் ;மக்கள் சாலை மறியல்
வீடுகளுக்குள் கழிவு நீர் ;மக்கள் சாலை மறியல்
வீடுகளுக்குள் கழிவு நீர் ;மக்கள் சாலை மறியல்
வீடுகளுக்குள் கழிவு நீர் ;மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 07, 2024 12:18 AM

ஊட்டி:ஊட்டி கமர்சியல் சாலை பகுதியில், வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்ததால் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 19வது வார்டு கமர்சியல் சாலை பகுதியில், கடைகள், ஓட்டல்கள் உட்பட, குடியிருப்புகள் நிறைந்துள்ளன. மழை காலங்களில் குடியிருப்பு வாசிகள் அச்சமடையும் நிலை உள்ளது. பாதாள சாக்கடைகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர், வீடுகளுக்குள் புகுந்து விடுவது தொடர்கிறது.
நேற்று இறைச்சி கழிவுகள் உட்பட, வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரை, துர்நாற்றத்திற்கு இடையே, பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மறியல் நடத்தியவர்களிடம், பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில்,'சக் ஷன்' லாரி உதவியுடன், கழிவுநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில், கழிவுநீர் புகாமல் இருக்க குழாய் அமைக்கவும் உறுதி அளிக்கப்பட்டது.