/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு அரசு விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
அரசு விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
அரசு விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
அரசு விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:18 AM
ஊட்டி:அரசு விடுதிகளில் சேர, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் பழங்குடியின பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில், 4ம் வகுப்பு முதல், பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில், பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் சேர தகுதி உடையவர்கள்.
விடுதிகளில் அனைத்து மாணவர்களுக்கும், மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். மேலும், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, நான்கு இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.
தவிர, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு, சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நுால்கள் வழங்கப்படும்.
கல்லுாரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ மாணவியருக்கு, ஜமக்காளம், பாய்கள் மற்றும் கம்பளி வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பதுடன், பயிலும் கல்வி நிறுவனம், இருப்பிடத்தில் இருந்து, 8 கி.மீ., தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூரம், மாணவியருக்கு பொருந்தாது. விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம்.
பள்ளி விடுதிகள் பொறுத்தவரை, பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பங்கள், வரும், 14ம் தேதிக்குள்ளும், கல்லுாரி விடுதிகள் பொறுத்தவரை, ஜூலை, 15ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது ஜாதி மற்றும் ஆண்டு வருமான சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது அளித்தால் போதுமானது. அரசின் சலுகையை பெற்று, மாணவர்கள் பயனடையலாம். இவ்வாறு, செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.