/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'பூமி பாலைவனமாக மாறுவதை தடுக்க வேண்டும்' பள்ளியில் நடந்த கருத்தரங்கில் அறிவுரை 'பூமி பாலைவனமாக மாறுவதை தடுக்க வேண்டும்' பள்ளியில் நடந்த கருத்தரங்கில் அறிவுரை
'பூமி பாலைவனமாக மாறுவதை தடுக்க வேண்டும்' பள்ளியில் நடந்த கருத்தரங்கில் அறிவுரை
'பூமி பாலைவனமாக மாறுவதை தடுக்க வேண்டும்' பள்ளியில் நடந்த கருத்தரங்கில் அறிவுரை
'பூமி பாலைவனமாக மாறுவதை தடுக்க வேண்டும்' பள்ளியில் நடந்த கருத்தரங்கில் அறிவுரை
ADDED : ஜூன் 07, 2024 12:19 AM
கோத்தகிரி:கோத்தகிரி கிரீன்வேலி மெட்ரிக் பள்ளியில், லாங்க்வுட் சோலை பாதுகாப்பு குழு சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கருத்தரங்கு மற்றும் மரம் நடு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் பொன்னையா தலைமை வகித்தார். கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினார்.
லாங்வுட்சோலை பாதுகாப்பு குழு செயலாளர் ஆசிரியர் ராஜூ சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசுகையில், ''இந்த உலகம் நமது பூமி; நமது எதிர்காலம். பூமி பாலைவனமாக மாறுவதை தவிர்க்க வேண்டும். நீர் ஆதாரங்களை பாதுகாப்பதுடன் காடுகள் வளம் மேம்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.
கோத்தகிரி 'கேர்' டிரஸ்ட் இயக்குனர் வினோபா , சென்னை கிருத்துவ கல்லுாரியின் சமுதாய பிரிவு முதல்வர் லெனின், தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடரந்து, பள்ளி வளாகத்தில், சோலை மரங்கள் நடவு செய்யப்பட்டன. சந்திரசேகர் நன்றி கூறினார்.