/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அகற்றாத குப்பை குவியல் பெரும் சுகாதார சீர்கேடு அகற்றாத குப்பை குவியல் பெரும் சுகாதார சீர்கேடு
அகற்றாத குப்பை குவியல் பெரும் சுகாதார சீர்கேடு
அகற்றாத குப்பை குவியல் பெரும் சுகாதார சீர்கேடு
அகற்றாத குப்பை குவியல் பெரும் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 16, 2024 01:23 AM

கோத்தகிரி,;கோத்தகிரி 'டான்பாஸ்கோ' பகுதியில் தேங்கிய குப்பைகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில், 21 வார்டுகளுக்கு உட்பட்ட, குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் குப்பைகள், பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம், சேகரிக்கப்பட்டு, மட்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும், மட்காத குப்பைகள் மறு சுழற்சிக்கும் உட்படுத்தப்படுகிறது.
பேரூராட்சி நிர்வாகம், கூடுமானவரை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இந்நிலையில், டான்பாஸ்கோ பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், அகற்றப்படாமல் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், இவ்வழியாகச் சென்று வரும் பள்ளி மாணவர்கள் உட்பட, குடியிருப்புகள் நிறைந்த பகுதி மக்களுக்கு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.