/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம் விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ADDED : ஜூலை 16, 2024 01:23 AM
பந்தலுார்;விக்கிரவாண்டி இடை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து, நெல்லியாளம் நகர தி.மு.க., சார்பில் தேவாலா பகுதியில், நகர செயலாளர் சேகர் தலைமையில், பட்டாசு வெடித்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் அமிர்தலிங்கம், தொண்டரணி தலைவர் ஞானசேகர், இளைஞர் அணி மாவட்ட இணைய அமைப்பாளர் முரளிதரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஹாலன், நிர்வாகிகள் குமார், பொன்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.