Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் குரூப் -1 தேர்வு 570 பேர் பிரசென்ட்; 418 பேர் ஆப்சென்ட்

ஊட்டியில் குரூப் -1 தேர்வு 570 பேர் பிரசென்ட்; 418 பேர் ஆப்சென்ட்

ஊட்டியில் குரூப் -1 தேர்வு 570 பேர் பிரசென்ட்; 418 பேர் ஆப்சென்ட்

ஊட்டியில் குரூப் -1 தேர்வு 570 பேர் பிரசென்ட்; 418 பேர் ஆப்சென்ட்

ADDED : ஜூலை 16, 2024 01:22 AM


Google News
ஊட்டி;மாநிலம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குரூப்--1 முதல் நிலை தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. ஊட்டியில், 988 பேர் தேர்வு எழுத, மூன்று மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கு ஏற்ப, 'வினாத்தாள், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்கள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவை சரிபார்த்தல்,' போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சரியான நேரத்தில் தேர்வு நடத்தப்பட்டது.

மேலும், தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட, 300 பேரில், 156 பேர் தேர்வு எழுதிய நிலையில், 144 பேர் வருகை புரியவில்லை.

இதே போல, ஊட்டி ரெக்ஸ் பள்ளியில், அனுமதிக்கப்பட்ட, 340 பேரில், 198 பேர் தேர்வு எழுதினர். 142 பேர் வருகை புரியவில்லை. ஊட்டி செயின்ட் ஜோசப் பள்ளி மையத்தில் அனுமதிக்கப்பட்ட, 348 பேரில், 216 பேர் தேர்வு எழுதிய நிலையில், 132 பேர் வருகை புரியவில்லை.

மொத்தம், மூன்று மையங்களில், 988 பேரில், 570 பேர் மட்டுமே தேர்வு எழுதிய நிலையில், 418 பேர் 'ஆப்சென்ட்' ஆயினர். தேர்வு மையங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us