ADDED : ஜூன் 15, 2024 12:38 AM

ஊட்டி;ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில், கோடப்பமந்து கால்வாயில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கோடப்பமந்து கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று காலை போலீசாருக்கு தகவல் வந்தது.
தொடர்ந்து, ஊட்டி நகர போலீசார் அங்கு சென்று பார்த்த போது, வட மாநில தொழிலாளி ஒருவரின் ஆண்ட சடலம் கிடந்துள்ளது. தகவலின் பேரில், 108 ஆம்புலன்ஸ் மற்றும் இறந்தவர் உடலை எடுத்தும் செல்லும் வாகனங்கள் வந்தன. உடலை போலீசார் பறிமுதல் செய்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் கூறுகையில்,'கோடப்பமந்து கால்வாயில், 30 முதல் 35 வயது வரை மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் காணப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை வந்தவுடன் பிர விபரங்கள் கூறப்படும்,' என்றனர்.