/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கர்ப்பத்துடன் உலா வரும் காட்டு யானை கண்காணிப்பில் வனத்துறை: டிரைவர்களுக்கு 'அட்வைஸ்' கர்ப்பத்துடன் உலா வரும் காட்டு யானை கண்காணிப்பில் வனத்துறை: டிரைவர்களுக்கு 'அட்வைஸ்'
கர்ப்பத்துடன் உலா வரும் காட்டு யானை கண்காணிப்பில் வனத்துறை: டிரைவர்களுக்கு 'அட்வைஸ்'
கர்ப்பத்துடன் உலா வரும் காட்டு யானை கண்காணிப்பில் வனத்துறை: டிரைவர்களுக்கு 'அட்வைஸ்'
கர்ப்பத்துடன் உலா வரும் காட்டு யானை கண்காணிப்பில் வனத்துறை: டிரைவர்களுக்கு 'அட்வைஸ்'
ADDED : ஜூன் 15, 2024 12:36 AM

குன்னுார்:'குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரம் கர்ப்பத்துடன் உலாவரும் காட்டு யானையால் முன்னெச்சரிக்கையுடன் வாகனங்கள் இயக்க வேண்டும்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையோர வனப்பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், கே.என்.ஆர்., குரும்பாடி பகுதிகளில் கர்ப்பத்துடன் யானை உலா வருகிறது. இதனுடன் பாதுகாப்புக்காக கொம்பன் யானையும் உள்ளது.
ஓரிரு நாட்களில் குட்டியை ஈன்று விடும் என்பதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
வனத்துறையினர் கூறுகையில்,' இந்த யானை சாலைகளை அவ்வப்போது கடக்கும் என்பதால் வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். சப்தம் போட்டு யானையை தொந்தரவு செய்ய கூடாது,' என்றனர்.