/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சத்துணவு மையத்திற்கு நிரந்தர தண்ணீர் வசதி அவசியம் சத்துணவு மையத்திற்கு நிரந்தர தண்ணீர் வசதி அவசியம்
சத்துணவு மையத்திற்கு நிரந்தர தண்ணீர் வசதி அவசியம்
சத்துணவு மையத்திற்கு நிரந்தர தண்ணீர் வசதி அவசியம்
சத்துணவு மையத்திற்கு நிரந்தர தண்ணீர் வசதி அவசியம்
ADDED : ஜூன் 15, 2024 12:39 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே அத்திக்குன்னா பகுதியில், அரசு ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதற்காக, இங்குள்ள எஸ்டேட் நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தண்ணீர் எடுத்து வரும் குழாயில் பழுது ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக தண்ணீர் 'சப்ளை' துண்டிக்கப்பட்டது.
இதனால், நெல்லியாளம் நகராட்சி மூலம் 'பாரி ஆக்ரோ எஸ்டேட்' நால்பாடி நர்சரி பகுதியில், குடிநீர் கிணறு அமைத்து அங்கிருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதி கவுன்சிலர் ஆலன் மற்றும் மக்கள் நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது ரப்பர் குழாய் மூலம் தற்காலிகமாக தண்ணீர் கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, சத்துணவு சமைக்க, பள்ளி வளாகத்தில் உள்ள சிறிய கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சென்று சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
பெற்றோர் கூறுகையில், ' பள்ளி மாணவர்கள் மற்றும் சத்துணவு சமையலர்கள் பயன்பெறும் வகையில், நிரந்தர தண்ணீர் வசதியை செயல்படுத்த வேண்டும்,' என்றனர்.