/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அனுமதியின்றி மது விற்பனை: இருவர் கைது அனுமதியின்றி மது விற்பனை: இருவர் கைது
அனுமதியின்றி மது விற்பனை: இருவர் கைது
அனுமதியின்றி மது விற்பனை: இருவர் கைது
அனுமதியின்றி மது விற்பனை: இருவர் கைது
ADDED : ஜூன் 22, 2024 12:17 AM
கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் அனுமதியின்றி பொது இடத்தில் மது விற்பனை செய்த, இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே, மது பிரியர்களுக்காக, பொது இடங்களில் மது விற்பனை செய்வது தொடர்கிறது. இது குறித்த தகவல் படி, எஸ்.ஐ.,கள் யாதவ் கிருஷ்ணன் மற்றும் வனக்குமார் ஆகியோர் தலைமையில், தனித்தனியாக சென்ற போலீசார் குழுக்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோத்தகிரி தாலுகா அலுவலக பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு குடியிருப்பு அருகே, கேரள மாநிலம், பாலக்காடு சின்னக் கரையை சேர்ந்த பிரசாந்த்,48, மது விற்பனை செய்தது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த, 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல, கட்டபெட்டு பஜார் பகுதியில், மதுரை மேலுாரை சேர்ந்த பரீத்கான், 29, என்பவர் அனுமதி இன்றி மது விற்பனை செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வைத்திருந்த, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.