/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காற்றில் சாய்ந்த நேந்திரன் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்த நேந்திரன் வாழை மரங்கள்
காற்றில் சாய்ந்த நேந்திரன் வாழை மரங்கள்
காற்றில் சாய்ந்த நேந்திரன் வாழை மரங்கள்
காற்றில் சாய்ந்த நேந்திரன் வாழை மரங்கள்
ADDED : ஜூன் 22, 2024 12:17 AM

கூடலுார்;கூடலுார் புளியம்பாறை கோழிக்கொல்லி பகுதியில் வீசிய பலத்த காற்றில், 300-க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் பகுதியில், மழையுடன் அடிக்கடி இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று ஏற்பட்டு வருகிறது. தொடரும் மழையால் சாலை மற்றும் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டுவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இப்பகுதியில் அறுவடைக்கு தயாராகி வரும் நேந்திரன் வழை மரங்கள் காற்றில் சாய்ந்து விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், புளியம்பாறை கோழிக்கொல்லி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த காற்றில், சுனில்பாபு என்ற விவசாயிக்கு சொந்தமான, 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து பாதிக்கப்பட்டது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்ததால், ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'நேந்திரன் வாழை மரங்களை, காட்டு யானைகளிடமிருந்து இரவில் கண் விழித்து காப்பாற்றி அறுவடை செய்து வருகிறோம். ஒரு வாழைமரம் நடவு செய்து அறுவடை செய்ய, 250 ரூபாய் வரை செலவாகிறது. காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்,' என்றனர்.