/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கூடலுார் குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானைகள் :விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கூடலுார் குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானைகள் :விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
கூடலுார் குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானைகள் :விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
கூடலுார் குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானைகள் :விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
கூடலுார் குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானைகள் :விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
ADDED : ஜூன் 22, 2024 12:18 AM

கூடலுார்;கூடலுார் தொரப்பள்ளி அருகே, குணியில் குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட இரண்டு ஆண் காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்தனர்.
கூடலுார் தொரப்பள்ளி, அள்ளூர்வயல், குணில், மண்வயல் ஆகிய பகுதிகள், முதுமலை புலிகள் காப்பத்தை ஒட்டி அமைந்துள்ளன. முதுமலையிலிருந்து காட்டு யானைகள், இப்பகுதிக்கு நுழைவதை தடுக்க, முதுமலை வன எல்லையில் அகழி அமைக்கப்பட்டுள்ளது. முதுமலையிலிருந்து சில காட்டு யானைகள், இரவில் பராமரிப்பில்லாத அகலியை கடந்து, குடியிருப்புக்குள் முகாமிட்டு, விவசாய பயிர்களை சேதம் செய்து மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும், அவைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று காலை இரண்டு ஆண் யானைகள், குணில் பகுதியில் நுழைந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய தோட்டங்களில் முகாமிட்டன.மக்கள் வெளியில் நடமாட முடியாமல் அச்சமடைந்தனர்.
கூடலுார் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், மனோகர் வீரமணி, வன ஊழியர்கள், இளைஞர்கள் உதவியுடன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு, மாலை, 4:00 மணிக்கு வனப்பகுதிக்கு சென்றன. கண்காணிப்பு பணி தொடர்கிறது.