/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியை மாநகராட்சியாக உயர்த்தும் திட்டம் ஊராட்சிகளை இணைக்க வேண்டிய அவசியமில்லை ஊட்டியை மாநகராட்சியாக உயர்த்தும் திட்டம் ஊராட்சிகளை இணைக்க வேண்டிய அவசியமில்லை
ஊட்டியை மாநகராட்சியாக உயர்த்தும் திட்டம் ஊராட்சிகளை இணைக்க வேண்டிய அவசியமில்லை
ஊட்டியை மாநகராட்சியாக உயர்த்தும் திட்டம் ஊராட்சிகளை இணைக்க வேண்டிய அவசியமில்லை
ஊட்டியை மாநகராட்சியாக உயர்த்தும் திட்டம் ஊராட்சிகளை இணைக்க வேண்டிய அவசியமில்லை
ADDED : ஜூலை 22, 2024 02:09 AM
ஊட்டி;'மாநகராட்சியாக தரம் உயர்த்த சில பேரூராட்சி, ஊராட்சிகளை இணைக்க வேண்டிய அவசியமில்லை,' என, நீலகிரி ஆவண காப்பக மைய தலைவர் தெரிவித்தார்.
ஊட்டி, 1866-ம் ஆண்டு நகராட்சியாக உருவானது. இதன் எல்லையை விரிவாக்கம் செய்து, நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், அதிக அளவில் அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வரும். இதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும் என்ற கருத்து உள்ளது. இந்த கோரிக்கைக்கு ஏற்ப, ஊட்டி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது.
கடந்த, 5ம் தேதி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி கமிஷனர் ஏகராஜ் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதன்படி, ஊட்டி நகராட்சியுடன் அருகில் உள்ள கேத்தி பேரூராட்சி மற்றும் இத்தலார், உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகள் இதில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கேத்தி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நீலகிரி ஆவண காப்பக மையத் தலைவர் வேணுகோபால் கூறுகையில்,''ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதை வரவேற்கிறோம். 36 வார்டில் 1.30 லட்சம் பேர் உள்ளனர். இதில், பிற பேரூராட்சி, ஊராட்சியை இணைக்க வேண்டிய அவசியமில்லை. தமிழகத்திலேயே ஊட்டி நகராட்சி போன்ற மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகள் பல உள்ளன. பிற மாநிலங்களிலும் உள்ளது. சில பேரூராட்சி, ஊராட்சிகளை இணைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்க வேண்டியதில்லை. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளையில் ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த வேண்டும்,'' என்றார்.