/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாநில அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் மாநில அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
மாநில அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
மாநில அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
மாநில அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2024 02:08 AM
ஊட்டி;நீலகிரியில் மாநில அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்து முன்னணி சார்பில், 'கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே, கோவிலை விட்டு வெளியேறு' என்ற தலைப்பில், இந்து ஆலயங்கள் அரசின் நிர்வாக சீர்கேடால் சீரழிவதாக கண்டித்து, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஊட்டி ஏ.டி.சி., திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணி மற்றும் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 'மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல ஆயிரம் கோவில்கள் இடிந்து, சிதிலமடைந்து, ஒரு கால பூஜை கூட நடப்பதில்லை; தரிசன கட்டணம், அர்ச்சனை கட்டணம் உட்பட, கட்டணம் என்ற பெயரில் கோவில்களில் கட்டண கொள்ளை நடக்கிறது.
மக்கள் வரிப்பணத்தில் சர்ச் மற்றும் மசூதி ஊழியர்களுக்கு, இரு சக்கர வாகனம் வசதி. ஆனால், கோவில் ஊழியர்களுக்கு எதுவும் இல்லை,' என்பன உட்பட, கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
* கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் சுந்தர், ரமேஷ் மற்றும் கோத்தகிரி ஒன்றிய தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 17 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, குன்னுார், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.