/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அறிவுரை வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அறிவுரை
வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அறிவுரை
வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அறிவுரை
வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க அறிவுரை
ADDED : ஜூலை 22, 2024 02:08 AM
ஊட்டி;படித்து வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இத்திட்டத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு, 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு, 600 ரூபாய், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
உதவித்தொகை பெற தகுதிகள்
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓர் ஆண்டு முடிந்திருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 2024, ஜூன், 30ம் தேதியன்று, 45 வயது; இதர பிரிவினருக்கு, 40 வயதும் கடந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம், 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரியில் நேரடியாக படித்து கொண்டிருக்கக் கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்.) முற்றிலும் வேலை இல்லாதவராக இருப்பதுடன், தனியார் துறை, சுய வேலைவாய்ப்பிலும் ஈடுபட்டிருக்க கூடாது. எந்த நிதி உதவியும் பெறுபவராக இருக்க கூடாது. விண்ணப்ப படிவங்களை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். உதவித்தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள், படிவங்களை பூர்த்தி செய்து, தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே, இவ்வலுவலகம் மூலம் உதவித்தொகை பெற்று வரும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் இம்மாத இறுதிக்குள், சுய உறுதி ஆவணத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.