/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு பஸ் மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு உயிர் தப்பிய பயணிகள் அரசு பஸ் மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு உயிர் தப்பிய பயணிகள்
அரசு பஸ் மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு உயிர் தப்பிய பயணிகள்
அரசு பஸ் மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு உயிர் தப்பிய பயணிகள்
அரசு பஸ் மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு உயிர் தப்பிய பயணிகள்
ADDED : ஜூலை 22, 2024 02:10 AM

கூடலுார்;கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, அனுமாபுரம் அருகே அரசு விரைவு பஸ் மீது, மரம் விழுந்த விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
கூடலுாரில் இருந்து சென்னையை செல்லும் பஸ் நேற்று மதியம், 14 பயணிகளுடன் ஊட்டி நோக்கி சென்றது. சென்னை சேர்ந்த ஓட்டுனர் செல்லமுத்து பஸ்சை ஓட்டி சென்றார். மதியம், 3:15 மணிக்கு, அனுமாபுரம் அருகே, பஸ் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் இருந்த மரம் திடீரென விழுந்து, பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது.
அதில், பயணித்த பஸ் ஊழியர்கள் மற்றும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
விபத்து காரணமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஊட்டிக்கும், தமிழகம்,கர்நாடகா, கேரளா செல்லும் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை துறையினர், பொக்லைன் உதவியுடன், 4:00 மணிக்கு மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.