/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்! கேரள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்! கேரள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்! கேரள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்! கேரள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்! கேரள அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 04, 2024 12:06 AM
பாலக்காடு;பாலக்காடு மருத்துவ கல்லுாரியின் அங்கீகாரம் ரத்தாகும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மருத்துவ கல்லுாரி பெற்றோர் ஆசிரியர் சங்கம் நிர்வாக குழு தலைவர் பிரதாபன், பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:
பழங்குடியின நலத்துறையின் கீழ், 2014ல் காங்., ஆட்சி காலத்தில் சிறப்பு முன்னுரிமை அளித்து செயல்பட துவங்கியது பாலக்காடு மருத்துவக் கல்லூரி. இங்கு எந்த வசதியும் இல்லை.
அரசு போதிய கவனம் செலுத்தாததால், கல்வி வசதியோ, அடிப்படை வசதிகளோ இல்லை. 10 ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில், மருத்துவக் கல்லூரியில் நூறு எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் தற்போது உள்ளன.
அரசின் செலவின புள்ளி விபரங்கள் அடிப்படையில், 550 கோடி ரூபாய் கல்லுாரியின் தேவைக்காக பழங்குடியின நல துறை செலவழித்ததாக கூறப்படுகின்றன.
ஆசிரியர் நியமனங்கள் கூட ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்வதால், ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. எந்த பிரிவிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லை.
பணி நியமனத்திற்கான வாரியம் இல்லாததால் நியமனங்கள் நடப்பதில்லை. அதனால், முதுகலைப் பட்டப்படிப்பு இதுவரை துவங்க முடியவில்லை.
பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ப சூழ்நிலை இல்லை. மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனை செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இதே நிலை தொடர்ந்தால், மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மருத்துவக் கல்லுாரியை நிலை நாட்ட அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மருத்துவக் கல்லூரியின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 7ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.