/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பெண் பாலியல் பலாத்காரம்: லாட்ஜ் உரிமையாளர் மீது வழக்கு பெண் பாலியல் பலாத்காரம்: லாட்ஜ் உரிமையாளர் மீது வழக்கு
பெண் பாலியல் பலாத்காரம்: லாட்ஜ் உரிமையாளர் மீது வழக்கு
பெண் பாலியல் பலாத்காரம்: லாட்ஜ் உரிமையாளர் மீது வழக்கு
பெண் பாலியல் பலாத்காரம்: லாட்ஜ் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஜூன் 04, 2024 12:06 AM
பாலக்காடு;பாலக்காடு அருகே, இளம்பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்த லாட்ஜ் உரிமையாளர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், செர்ப்புளச்சேரியை சேர்ந்த பெண், சளவரா பகுதியை சேர்ந்த முகமது பஷீர், என்பவரின் லாட்ஜில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி, அப்பெண்ணை பஷீர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், 25 பவுன் நகைகளையும் பறித்துள்ளார்.
இது குறித்து, பாலக்காடு மாவட்ட எஸ்.பி.,யிடம் அப்பெண் அளித்த புகாரின் பேரில், செர்ப்புளச்சேரி விசாரித்துள்ளார்.
ஆனால், பஷீர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யாமல், வெளிநாடு தப்பிச்செல்ல விட்டு விட்டதாக, போலீசார் மீது அப்பெண் புகார் தெரிவித்தார். இதையடுத்து, அப்பெண் நீதிமன்றத்தை அணுகியதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.