/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கார் -- லாரி மோதி விபத்து: கேரளா வாலிபர் பலி கார் -- லாரி மோதி விபத்து: கேரளா வாலிபர் பலி
கார் -- லாரி மோதி விபத்து: கேரளா வாலிபர் பலி
கார் -- லாரி மோதி விபத்து: கேரளா வாலிபர் பலி
கார் -- லாரி மோதி விபத்து: கேரளா வாலிபர் பலி
ADDED : ஜூன் 04, 2024 12:05 AM
கூடலுார்;ஊட்டி பைக்காரா அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கார்-லாரி மோதிய விபத்தில் கேரளா வாலிபர் உயிரிழந்தார்.
கேரளா மாநிலம் இருவாட்டி பகுதியை சேர்ந்த சரத், 35, என்பவர் நண்பர்கள் மூவருடன் நேற்று முன்தினம் காரில், ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இவர்கள் கூடலுார் நடுவட்டம் பகுதியை கடந்து ஊட்டி நோக்கி சென்றனர். பைகாரா, 9வது மைல் அருகே, எதிரே வந்த லாரியும், இவர்கள் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த, சரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் சிகிச்சிக்காக அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். சம்பவம், தொடர்பாக பைக்காரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.