/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விளையாட்டுக்கு ஊக்குவிப்பு; வாலிபால் போட்டி நடத்தி அசத்தல் விளையாட்டுக்கு ஊக்குவிப்பு; வாலிபால் போட்டி நடத்தி அசத்தல்
விளையாட்டுக்கு ஊக்குவிப்பு; வாலிபால் போட்டி நடத்தி அசத்தல்
விளையாட்டுக்கு ஊக்குவிப்பு; வாலிபால் போட்டி நடத்தி அசத்தல்
விளையாட்டுக்கு ஊக்குவிப்பு; வாலிபால் போட்டி நடத்தி அசத்தல்
ADDED : மார் 13, 2025 09:12 PM

குன்னுார்; குன்னுாரில் இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் அ.தி.மு.க., சார்பில் நடந்த வாலிபால் போட்டியில், 4 அணி வீரர்கள் சாதித்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில், சோல்ராக் கிராம மைதானத்தில் வாலிபால் போட்டி நடந்தது. 18 வார்டுகளை சேர்ந்த இளைஞர்கள் அடங்கிய, 14 அணிகளாக பிரித்து, 3 சுற்றுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், 'ஆர்செடின் அணி, டான் டீ அணி, சோல்ராக் அணி, பென்காம் அணி,' என்ற முறையில், முதல் 4 இடங்களில் வெற்றி பெற்றன. நடுவர்களாக ராமலிங்கம், ராஜேந்திரன் இருந்தனர். உலிக்கல் பேரூராட்சி அ.தி.மு.க., செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்து, ஜெ., நினைவு கோப்பையை வழங்கினார்.
ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் கண்ணன், மேலுார் வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் முரளி, மாவட்ட பிரதிநிதி முருகன் முன்னிலை வகித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உலிக்கல் பேரூராட்சி அ.தி.மு.க., துணை செயலாளர் லட்சுமணன், ராஜேந்திரன் உட்பட பலர் செய்திருந்தனர்.