/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அரசு பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பள்ளியில் நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 13, 2025 09:13 PM
பந்தலுார்; உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, பந்தலுார் அருகே கரிய சோலை, அரசு உயர்நிலை பள்ளியில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், குடிமக்கள் நுகர்வோர் மன்றம், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டது.
நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் மணிவாசகம் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் புளோரா குளோரி தலைமை வகித்தார். ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கூடலுார் மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார், நுகர்வோரின் கடமைகள் என்ன என்பது குறித்து விளக்கி பேசியதுடன், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் நுகர்வோர் தினம் குறித்தும், நுகர்வோர் பொருட்களை வாங்குவது மற்றும் அதன் தரத்தை பரிசோதிப்பது குறித்து விளக்கி பேசினார்.
மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.