/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணம் செலுத்த நிர்பந்தம் அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணம் செலுத்த நிர்பந்தம்
அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணம் செலுத்த நிர்பந்தம்
அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணம் செலுத்த நிர்பந்தம்
அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணம் செலுத்த நிர்பந்தம்
ADDED : மார் 13, 2025 09:12 PM
பந்தலுார்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கூடலுார் கோட்டத்தில் மட்டும், 150-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களுக்கான மின் கட்டணம், மாதந்தோறும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் செலுத்தப்பட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக அலுவலகம் சார்பில் மின் கட்டணம் செலுத்தாமல் நிறுத்தப்பட்டதால், தற்போது, ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களுக்கும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் நிலுவையாக உள்ளது. மேலும், இதற்கு அபராத தொகையுடன் சேர்த்து பல மடங்கு உயர்ந்துள்ளதால், 'அதனை அந்தந்த அங்கன்வாடி மைய ஆசிரியர்கள் செலுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், 'ஒரு அங்கன்வாடி ஆசிரியரும் அபராத தொகையுடன் மின்கட்டணத்தை செலுத்தி, அதற்கான ரசீதை அலுவலகத்தில் செலுத்தவும், தவறும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறைந்த சம்பளம் வாங்கும் அங்கன்வாடி ஆசிரியர்கள், மின் கட்டணம் செலுத்த முடியாமல், அதிகாரிகளின் பேச்சை மீற முடியாமல் சிக்கலில் உள்ளனர். அவர்கள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து, அபராத தொகையுடன் கூடிய மின் கட்டணத்தை அலுவலகம் மூலம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
குந்தைகள் வளர்ச்சி திட்ட கீதா கூறுகையில்,'' மின் கட்டணத்தை அபராத தொகையுடன் செலுத்தி, ரசீதை அலுவலகத்தில் கொடுத்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும்,'' என்றார்.