/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்; 143 பேர் பங்கேற்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்; 143 பேர் பங்கேற்பு
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்; 143 பேர் பங்கேற்பு
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்; 143 பேர் பங்கேற்பு
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்; 143 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 23, 2024 11:22 PM
ஊட்டி:ஊட்டியில் தனியார் துறை மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நடந்த வேலைவாய்பபு முகாமில், 31 பேர் பயனடைந்தனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஊட்டியில் நடந்தது. அதில், பல்வேறு பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய, 12 முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன.
முகாமில், 8ம் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை தேர்ச்சி பெற்றவர்கள், பட்டய படிப்பு, ஐ.டி.ஐ., கம்ப்யூட்டர் இயக்குபவர்கள் மற்றும் டிரைவர்கள் என, 143 பேர் பல்வேறு பணிகளில் சேர பங்கேற்றனர். இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆவணங்கள் சரிபார்ப்பு; நேர் காணல் பணிகளுக்கு பின்பு, 31 பேருக்கு பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட வேலை வாய்ப்பு அலவலர் சாகுல் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.