/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ADDED : ஜூன் 23, 2024 11:24 PM

குன்னுார்;குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிறைவு பெற்ற நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. கடந்த சில நாட்களாக பள்ளிகள் திறப்பு காரணமாக, பிற மாவட்ட பயணிகள் குறைந்த அளவில் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மற்றும் வட மாநில பகுதிகளில் இருந்து, சிம்ஸ் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதமான காலநிலை இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாலையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் பூங்காவை கண்டு ரசித்தனர்.