/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காரமடையில் வெளிநாட்டவர்களை கண்காணிக்கும் போலீசார் காரமடையில் வெளிநாட்டவர்களை கண்காணிக்கும் போலீசார்
காரமடையில் வெளிநாட்டவர்களை கண்காணிக்கும் போலீசார்
காரமடையில் வெளிநாட்டவர்களை கண்காணிக்கும் போலீசார்
காரமடையில் வெளிநாட்டவர்களை கண்காணிக்கும் போலீசார்
ADDED : ஜூன் 20, 2024 05:58 AM
மேட்டுப்பாளையம் : காரமடையில் உள்ள தொழில்நிறுவனங்களில் வெளிநாட்டவர்கள் பணி புரிகிறார்களா, அவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த நிறுவனங்களில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலாளர்கள் என பல நூறு தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதனிடையே காரமடை அருகே சின்ன புத்தூர் பகுதியில் தனியார் காஸ்டிங் நிறுவனத்தில், உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வங்கதேச இளைஞர் ஒருவர் தங்கி இருப்பதாக, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரனுக்கு நேற்று முன் தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், வங்கதேசத்தை சேர்ந்த அராபத், 22, என்பவர் பாஸ்போர்ட், விசா என உரிய ஆவணங்கள், எதுவும் இன்றி அங்கு பணிபுரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து அராபத்தை காரமடை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து காரமடையில் உள்ள தொழில்நிறுவனங்கள், விவசாய தோட்டங்கள், வணிக நிறுவனங்கள், விடுதிகள் போன்றவற்றில் வெளிநாட்டினர் யாராவது தங்கி உள்ளனரா, அப்படி இருந்தால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா என காரமடை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, கண்காணித்து வருகின்றனர்.-----