/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கோவை புறநகரில் ஜமாபந்தி இன்று துவக்கம் கோவை புறநகரில் ஜமாபந்தி இன்று துவக்கம்
கோவை புறநகரில் ஜமாபந்தி இன்று துவக்கம்
கோவை புறநகரில் ஜமாபந்தி இன்று துவக்கம்
கோவை புறநகரில் ஜமாபந்தி இன்று துவக்கம்
ADDED : ஜூன் 20, 2024 05:58 AM
மேட்டுப்பாளையம் :மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், இன்று (20ம் தேதி) ஜமாபந்தி துவங்குகிறது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில், இன்று (20ம் தேதி) முதல், 26ம் தேதி முடிய ஜமாபந்தி நடைபெற உள்ளது. இன்று காலை 10:00 மணிக்கு மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி துவங்க உள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.
இன்று காரமடை உள் வட்டத்திற்கு உட்பட்ட கெம்மாரம்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது. 21ம் தேதி மருதூர், காரமடை, பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது.
வருகிற, 25ம் தேதி மேட்டுப்பாளையம் உள் வட்டத்திற்கு உட்பட்ட, நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், சிறுமுகை, ஜடையம்பாளையம், 26ம் தேதி இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி, முடுதுறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு, ஜமாபந்தி நடைபெற உள்ளது.
அந்தந்த தேதியில், அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, மாவட்ட கலெக்டரிடம், கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறும்படி, மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் அறிவித்துள்ளார்.
சூலுார்
சூலூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜமா பந்தி இன்று துவங்குகிறது.
கருமத்தம்பட்டி உள் வட்டத்தில் உள்ள பதுவம்பள்ளி, கணியூர், காடுவெட்டி பாளையம், மோப்பிரி பாளையம், கிட்டாம்பாளையம், அரசூர், செம்மாண்டாம் பாளையம், கரவழி மாதப்பூர், கருமத்தம்பட்டி, நீலம்பூர், மைலம்பட்டி ஆகிய கிராமங்களுக்கான ஜமா பந்தி, இன்று நடக்கிறது.
சூலூர் உள்வட்டத்தில் உள்ள, இருகூர், ராசிபாளையம், காடாம்பாடி, காங்கயம் பாளையம், சூலூர், கண்ணம்பாளையம், ஒட்டர் பாளையம், பட்டணம், பீடம் பள்ளி, கலங்கல் உள்ளிட்ட கிராமங்களுக்கான ஜமா பந்தி, நாளை நடக்கிறது.
அன்னுார்
அன்னுார் தாலுகா அலுவலகத்தில், ஜமா பந்தி இன்றும் (20 ம் தேதி), நாளையும் (21 ம் தேதி) தனி துணை கலெக்டர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு செய்தல், நில அளவை செய்தல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு, மகளிர் உரிமை திட்ட தொகை, தொகுப்பு வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் மனு கொடுக்கலாம். இன்று ( 20 ம் தேதி) அன்னுார் பேரூராட்சி, வடவள்ளி, காரே கவுண்டம்பாளையம், கரியாம்பாளையம், பிள்ளையப்பம் பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், குன்னத்தூர், பச்சாபாளையம், நாரணாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு கொடுக்கலாம்.
நாளை ( 21ம் தேதி) பொகலூர், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி, வடக்கலூர், அ மேட்டுப்பாளையம், பசூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ஒட்டர்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள் மனு கொடுக்கலாம்,' என அன்னுார் தாசில்தார் நித்தில வள்ளி தெரிவித்துள்ளார்.