/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஓடையில் சுத்திகரிப்பு செய்யாமல் விடப்படும் கழிவு நீர் ஓடையில் சுத்திகரிப்பு செய்யாமல் விடப்படும் கழிவு நீர்
ஓடையில் சுத்திகரிப்பு செய்யாமல் விடப்படும் கழிவு நீர்
ஓடையில் சுத்திகரிப்பு செய்யாமல் விடப்படும் கழிவு நீர்
ஓடையில் சுத்திகரிப்பு செய்யாமல் விடப்படும் கழிவு நீர்
ADDED : ஜூன் 20, 2024 06:53 AM

மேட்டுப்பாளையம்,: கழிவு நீரை சுத்திகிரிப்பு செய்யாமல், ஏழு எருமை பள்ளத்தில் விடுவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பவானி ஆறு செல்லும் வழிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பவானி ஆற்றுக்கு நீர்வரத்து வரும் ஓடைகளில் மிகவும் முக்கியமானது ஏழு எருமை பள்ளத்துக்கு செல்லும் ஓடை. அந்த நீர் பவானிசாகர் அணைக்கும் சென்றடைகிறது.
இந்த ஓடையில் மழை பெய்யும் போது மட்டுமே தண்ணீர் ஓரளவு மாசு இல்லாமல் செல்கிறது. பிற நாட்களில் பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பேரூராட்சிகளின் கழிவு நீர், தொழில்நிறுவனங்களின் கழிவு நீர் தான் செல்கிறது. இதனால் ஓடை தண்ணீர் கருப்பு நீறத்திலும், நுரை பொங்கியும் செல்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் கூறியதாவது:-
ஏழு எருமை பள்ளத்திற்கு வரும் ஓடை நீர் முற்றிலும் மாசடைந்து வருகிறது. பவானி ஆற்றுக்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படும் கால்நடைகள் மாசடைந்த நீரை குடிப்பதால், அவற்றுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. பவானிசாகர் அணையில் பவானி ஆறு வாயிலாக கலக்கும் இந்த கழிவு நீர், அங்கிருந்து காவேரியிலும் கலக்கிறது. இதனால் பல மாவட்டங்கள் பாதிப்படைகின்றன.
பேரூராட்சிகள், ஊராட்சிகள், தொழில்நிறுவனங்கள் போன்றவைகள் கழிவு நீரை சுத்திகிரிப்பு செய்து விடவில்லை என்றால், எதிர்காலத்தில் பவானி ஆறு முழுவதும் மாசடைந்து சாக்கடையாக மாறிவிடும். கால்நடைகள் வளர்ப்பு, விவசாயம் குறைந்து விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'ஓடையில் இருந்து எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை தாங்க முடியவில்லை. காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. கோவை மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும், என்றனர்.
-------