/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ முதுமலை புலிகள் காப்பகம் மூடல் :கன மழை எதிரொலி முதுமலை புலிகள் காப்பகம் மூடல் :கன மழை எதிரொலி
முதுமலை புலிகள் காப்பகம் மூடல் :கன மழை எதிரொலி
முதுமலை புலிகள் காப்பகம் மூடல் :கன மழை எதிரொலி
முதுமலை புலிகள் காப்பகம் மூடல் :கன மழை எதிரொலி
ADDED : ஜூலை 21, 2024 01:11 AM

கூடலுார்;நீலகிரியில் தொடரும் மழையால் முதுமலை புலிகள் காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கன மழை பெய்து வருகிறது. மழைக்கு மண் சரிவு, சாலைகளில் விரிசல் என, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
முதுமலை வனத்துறையினர் வெளியிட்ட அறிக்கை: முதுமலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்த கன மழைக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இப்பகுதியில் கன மழை மற்றும் பலத்த காற்று இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, தெப்பக்காட்டில் இயங்கி வரும் சூழல் சுற்றுலா மையம், 20ம் தேதி முதல் நாளை, 22ம் தேதி வரை மூடப்பட்டு, வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா விடுதிகளும் மூடப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.