/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'மண் சரிவு பகுதிகளில் புவியியல் துறை ஆய்வு' 'மண் சரிவு பகுதிகளில் புவியியல் துறை ஆய்வு'
'மண் சரிவு பகுதிகளில் புவியியல் துறை ஆய்வு'
'மண் சரிவு பகுதிகளில் புவியியல் துறை ஆய்வு'
'மண் சரிவு பகுதிகளில் புவியியல் துறை ஆய்வு'
ADDED : ஜூலை 21, 2024 01:12 AM

பந்தலுார்;''பந்தலுார், கூடலுார் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை புவியியல் துறையினர் மூலம் ஆய்வு நடத்தப்படும்,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழைக்கு பந்தலுார், கூடலுார் பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் அபாய நிலையில் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதிகளை சேர்ந்த, 36 பேர் சேரம்பாடியில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரண பொருட்கள் மற்றும், 2,000 ரூபாய் வழங்கினார்.
அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், '' கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மழைக்காலங்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள குடியிருப்புகள் குறித்து புவியியல் துறை மூலம் உடனடியாக ஆய்வு செய்யப்படும். அங்கு, தொடர்ச்சியாக பேரிடர்கள் ஏற்படும் என தெரியவந்தால் அந்த பகுதி மக்களை மாற்றிடத்தில் குடியமர்த்தப்படுவார்கள். பொதுமக்கள் மழைக்காலங்களில் தங்கள் பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக அரசுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மீட்பு பணிகள் மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும்.'' என்றார்.
கூடலுார் ஆர்.டி.ஓ. செந்தில்குமார், வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.