/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காதலித்து திருமணம் செய்த பெண் கடத்தல்: 4 பேர் கைது காதலித்து திருமணம் செய்த பெண் கடத்தல்: 4 பேர் கைது
காதலித்து திருமணம் செய்த பெண் கடத்தல்: 4 பேர் கைது
காதலித்து திருமணம் செய்த பெண் கடத்தல்: 4 பேர் கைது
காதலித்து திருமணம் செய்த பெண் கடத்தல்: 4 பேர் கைது
ADDED : ஜூன் 14, 2024 02:49 AM
குன்னுார்:குன்னுார் அருகே, காதலித்து திருமணம் செய்த பெண்ணை கடத்தியதால் பெற்றோர் உட்பட, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை ஊழியர் வாசன் என்பவரின் மகன் கவின்குமார்,24. கார் டிரைவரான இவர், எடப்பள்ளி பகுதியை சேர்ந்த ரோஷினி,23, என்பவரை காதலித்துள்ளார்.
பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வெலிங்டன் போலீசில் தஞ்சமடைந்து, பழனியில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அருவங்காடு தொழிற்சாலை குடியிருப்பில் இருந்த ரோஷினியை, 10ம் தேதி பெண்ணின் உறவினர்கள் கடத்தினர். கவின்குமார் அளித்த புகாரின் பேரில், ஒசூரில் இருந்த ரோஷினியை அருவங்காடு போலீசார் மீட்டனர்.
இது தொடர்பாக, பெண்ணின் தந்தை கோபாலகிருஷ்ணன், தாயார்சாந்தி, தாய் மாமன் நஞ்சுண்டன், சித்தப்பா ரவிக்குமார் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும், இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.