/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நாளை புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா நாளை புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
நாளை புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
நாளை புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
நாளை புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
ADDED : ஜூன் 14, 2024 11:37 PM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழா, நாளை (16ம் தேதி) நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உள்ள, புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருப்பலி நிறைவடைந்தவுடன் கோவை மறை மாவட்ட பொருளாளர் ஆண்டனி செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்தார். 11ம் தேதியிலிருந்து, 14ம் தேதி வரை பால் வின்சென்ட், சிஜீ, லூயிஸ் ராஜ், சேவியர் கிளாடிஸ் ஆகிய பாதிரியார்கள் திருப்பலியை நிறைவேற்றி மறைவுரை ஆற்றினர். நாளை (16ம் தேதி) தேர் திருவிழாவை முன்னிட்டு காலை 8:15 மணிக்கு திருவிழா சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலியை நல்லாயன் குரு மட உதவி அதிபர் கிறிஸ்டோபர் ரோஸ் நிறைவேற்ற உள்ளார். மாலை, 6:00 மணிக்கு பாதிரியார் ஜோசப் சுதாகர் திருப்பலியை நிறைவேற்றி அலங்கார தேர் பவனியை துவக்கி வைக்கிறார்.
விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ், அருள் சகோதரிகள், அன்பியத்தினர், பங்கு மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர். தேர் திருவிழாவை முன்னிட்டு, ஆலயம் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.