/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பச்சை பட்டாணி விலை உயர்வு கிலோ ரூ.400 பச்சை பட்டாணி விலை உயர்வு கிலோ ரூ.400
பச்சை பட்டாணி விலை உயர்வு கிலோ ரூ.400
பச்சை பட்டாணி விலை உயர்வு கிலோ ரூ.400
பச்சை பட்டாணி விலை உயர்வு கிலோ ரூ.400
ADDED : ஜூன் 14, 2024 02:19 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் விளையும் பச்சை பட்டாணி தரமாக உள்ளதால், மாநிலம் முழுதும் உள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படுகிறது.
கால நிலை மாற்றம், வனவிலங்கு தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஊட்டியில் பச்சை பட்டாணி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக பச்சை பட்டாணி வரத்து குறைந்ததுடன், விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, சாதாரண நாட்களில் கிலோ, 180 - 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட பட்டாணி, நேற்று ஊட்டி மார்க்கெட்டில் கிலோ, 400 ரூபாய் வரை விற்பனையானது.