ADDED : ஜூன் 16, 2024 01:25 AM

கோத்தகிரி:நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான் சலீவன். இவர், லண்டன் மாநகரில், 1788ம் ஆண்டு ஜூன், 15 ல் பிறந்தார்.
இவர், கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தில், 1819ம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகத்தை திறந்து, 1822ம் ஆண்டு வரை நிர்வகித்து வந்தார். பிறகு, ஊட்டிக்கு தனது அலுவலகத்தை மாற்றினார். இவர், 1855 ஜன, 16ல் மரணம் அடைந்தார்.
கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அமைந்துள்ள ஜான் சலீவன் நினைவிடம் தற்போது நீலகிரி ஆவண காப்பகமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில், அவரது, 236 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி மாவட்ட கலெக்டர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.