/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காயம்பட்ட சிறுத்தை பலி; வனத்துறை விசாரணை காயம்பட்ட சிறுத்தை பலி; வனத்துறை விசாரணை
காயம்பட்ட சிறுத்தை பலி; வனத்துறை விசாரணை
காயம்பட்ட சிறுத்தை பலி; வனத்துறை விசாரணை
காயம்பட்ட சிறுத்தை பலி; வனத்துறை விசாரணை
ADDED : ஜூன் 03, 2024 12:45 AM
கூடலுார்;கூடலுார் அருகே காயத்துடன் உலா வந்த சிறுத்தை பலியானது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல் கூடலுார் கோக்கால் பகுதியில் நேற்று முன்தினம் காலை தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று காலில் காயத்துடன் உலா வருவதை அப்பகுதியினர் பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில், வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காலவலர்கள், சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டார்.
இந்நிலையில், அப்பகுதியில் இருந்து பாறை அருகே காயங்களுடன் சிறுத்தை இறந்து கிடந்தது. வனத்துறையினர் முன்னிலையில் அதன் உடலை முதுமலை கால்நடை டாக்டர் பிரேத பரிசோதனை செய்தார்.