/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் தொடர் மழை குன்னுாரில் குவியும் பயணிகள் ஊட்டியில் தொடர் மழை குன்னுாரில் குவியும் பயணிகள்
ஊட்டியில் தொடர் மழை குன்னுாரில் குவியும் பயணிகள்
ஊட்டியில் தொடர் மழை குன்னுாரில் குவியும் பயணிகள்
ஊட்டியில் தொடர் மழை குன்னுாரில் குவியும் பயணிகள்
ADDED : ஜூன் 03, 2024 12:46 AM

குன்னுார்;ஊட்டியில் மழையின் காரணமாக, குன்னுாரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
நீலகிரியில் கோடை சீசன் நிறைவு பெற்ற நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஓரளவு உள்ளது. இந்நிலையில், ஊட்டியில் கொட்டி தீர்க்கும் கனமழையால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா மையங்களை பார்வையிட முடியாமல் உள்ளனர்.
அதே நேரத்தில் குன்னுாரில் இதமான காலநிலையுடன் அவ்வப்போது வெயிலான காலநிலை நிலவுகிறது. இதனால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குன்னுாருக்கு வருகை தருவது அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம், சிம்ஸ் பூங்காவிற்கு, 3,800 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள், பழக்கண்காட்சிக்கு பழங்களால் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்ட 'கிங்காங்' உட்பட சில வடிவமைப்புகளை ரசித்து செல்கின்றனர்.
பள்ளிகள், 10ம் தேதி திறப்பதால், இன்னும் ஒரு வாரம் கூட்டம் இருக்க வாய்ப்புள்ளது. தற்போது, சிம்ஸ் பூங்கா வரும் சுற்றுலா பயணிகள், படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மலை ரயிலிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.