/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நீலகிரியில் இதுவரை இல்லாத அளவில்... உருளை கிழங்கு விலை உச்சம்! அதிக விலைக்கு விற்பதால் மக்கள் பாதிப்பு நீலகிரியில் இதுவரை இல்லாத அளவில்... உருளை கிழங்கு விலை உச்சம்! அதிக விலைக்கு விற்பதால் மக்கள் பாதிப்பு
நீலகிரியில் இதுவரை இல்லாத அளவில்... உருளை கிழங்கு விலை உச்சம்! அதிக விலைக்கு விற்பதால் மக்கள் பாதிப்பு
நீலகிரியில் இதுவரை இல்லாத அளவில்... உருளை கிழங்கு விலை உச்சம்! அதிக விலைக்கு விற்பதால் மக்கள் பாதிப்பு
நீலகிரியில் இதுவரை இல்லாத அளவில்... உருளை கிழங்கு விலை உச்சம்! அதிக விலைக்கு விற்பதால் மக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 29, 2024 01:54 AM

ஊட்டி;ஊட்டியில் இதுவரை இல்லாத வகையில், ஒரு கிலோ உருளைக்கிழங்கு,100 ரூபாய்க்கு நேற்று ஏலம் போனது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, நீர் ஆதாரம் உள்ள நிலங்களில், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
அதில், உருளைக்கிழங்கு சாகுபடிக்கு மற்ற காய்கறிகளை காட்டிலும், கூடுதல் முதலீடு தேவை. உருளைக்கிழங்கு விதைத்து அறுவடை செய்வது வரை செலவினம் அதிகரிக்கிறது.
அதிக பரப்பில் விளைவிப்பு
நடப்பாண்டு ஓரளவு மழை பெய்த நிலையில், மாவட்டத்தில், கோத்தகிரி, நெடுகுளா, ஈளாடா, கூக்கல்தொறை, ஊட்டி எம்.பாலாடா, நஞ்சநாடு, அணிக்கொரை, கப்பச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதி பரப்பளவில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கிழங்கு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி மார்க்கெட்டில், கடந்த சில நாட்களாக, ஒரு கிலோ உருளைக்கிழங்கு அதிகபட்சமாக, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த உருளைக்கிழங்கு, 100 ரூபாய் வரை ஏலம் எடுக்கப்பட்டு உச்சத்தை தொட்டது. மேட்டுப்பாளையம் மண்டிகளில், விற்பனைக்காக உருளைக்கிழங்கு கொண்டு செல்லும் போது, லாரி வாடகை, ஏற்று இறக்கு கூலி, மண்டி கமிஷன் என கூடுதல் தொகை விவசாயிகளுக்கு செலவாகிறது.
அதே நேரத்தில், ஊட்டி, குன்னுார் மற்றும் கோத்தகிரி உள்ளூர் மார்க்கெட்களில் நேரடியாக விற்பனை செய்யும் போது, விவசாயிகளுக்கு செலவினம் குறைவதுடன் கூடுதல் லாபம் கிடைக்கிறது. இதனால், மழை தீவிரமாவதற்கு முன்பு, கூடுமான வரை, அறுவடை செய்யப்படும் உருளைக்கிழங்கு உள்ளூர் மண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது.
25 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்கதலைவர் ராஜா முகமது கூறுகையில், ''கடந்த, 25 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 100 ரூபாய்க்கு ஏலம் போனது. 40 கிலோ கொண்ட ஒரு துண்டு, 4,000 ரூபாய்க்கு ஏலம் போகிறது. விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது,'' என்றார்.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும், 800 எக்டர் பரப்பளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு போகத்தில் மட்டும், 300 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அதே வேளையில், கடைகளில் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்றால், உருளை கிழங்கு ஏழைக்கு எட்டாகனியாகும்,'' என்றார்.