/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஊட்டியில் காட்டெருமை உலா குடியிருப்பு வாசிகள் அச்சம் ஊட்டியில் காட்டெருமை உலா குடியிருப்பு வாசிகள் அச்சம்
ஊட்டியில் காட்டெருமை உலா குடியிருப்பு வாசிகள் அச்சம்
ஊட்டியில் காட்டெருமை உலா குடியிருப்பு வாசிகள் அச்சம்
ஊட்டியில் காட்டெருமை உலா குடியிருப்பு வாசிகள் அச்சம்
ADDED : ஜூன் 29, 2024 01:57 AM

ஊட்டி;ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் சுற்றி திரியும் காட்டெருமையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பாம்பே கேசில் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியை சுற்றி தனியார் கல்லுாரி, நெடுஞ்சாலை துறை அலுவலகம் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன.
எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு இவ்வழியாக தான் செல்ல வேண்டும். எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ளது. கடந்த சில நாட்களாக எல்க்ஹில் வனத்திலிருந்து வெளியேறிய காட்டெருமை பாம்பே கேசில் பகுதியில் சுற்றி வருகிறது. மக்கள் அச்சமடைந்துள்ளனர். மக்கள் கூறுகயைில்,' இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு காட்டெருமையை வனத்திற்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.