/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பள்ளி பார்லிமென்ட் தேர்தல் மாணவ, மாணவியர் ஆர்வம் பள்ளி பார்லிமென்ட் தேர்தல் மாணவ, மாணவியர் ஆர்வம்
பள்ளி பார்லிமென்ட் தேர்தல் மாணவ, மாணவியர் ஆர்வம்
பள்ளி பார்லிமென்ட் தேர்தல் மாணவ, மாணவியர் ஆர்வம்
பள்ளி பார்லிமென்ட் தேர்தல் மாணவ, மாணவியர் ஆர்வம்
ADDED : ஜூன் 29, 2024 01:52 AM

கூடலுார்;கூடலுார் மேப்பீல்டு நடுநிலைப் பள்ளியில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கூடலுார் மேப்பீல்ட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில், தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, 34 மாணவர்கள் போட்டியிட்டனர்.
தேர்தல் அலுவலர்களாக ஆசிரியர்கள் பாபு, குமார், கற்பகவள்ளி, பார்வதி, தஸ்னி, சுலைகா, மாலதி மற்றும் மாணவ வேட்பாளர்களின் பிரதிநிதிகள் ஓட்டுச்சாவடியில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஓட்டளிக்க அனுமதித்தனர். மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் ஓட்டுகளை பதி செய்தனர்.
'மாணவர்களுக்கு பள்ளியில் நடைபெறும் தேர்தலின் முக்கியத்துவம், விதிமுறைகள்,' குறித்து பள்ளி தலைமையாசிரியர் பால்விக்டர் விளக்கினார். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.